ஆன்மிகம்
கொட்டையூர் கோடீஸ்வரர்

கொட்டையூர் கோடீஸ்வரர்

Published On 2020-08-18 06:01 GMT   |   Update On 2020-08-18 06:01 GMT
எங்கும் ஒளி ரூபமாக வீற்றிக்கும் சிவபெருமான், கும்பகோணம் அடுத்துள்ள கொட்டையூரில் கோடீஸ்வரர் என்ற திருநாமத்தைத் தாங்கி நிற்கிறார்.
கும்பகோணத்தில் அமுத கலசத்தின் மீது அம்பு எய்தார், சிவபெருமான். அந்த கலசத்தில் இருந்து தெறித்த ஒரு துளி அமிர்தம், கும்பகோணம் அடுத்துள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் குளத்திற்குள் விழுந்தது. இதையடுத்து அந்த குளம், அமிர்தக் கிணறாக மாறியது.

எங்கும் ஒளி ரூபமாக வீற்றிக்கும் சிவபெருமான், இங்கு கோடீஸ்வரர் என்ற திருநாமத்தைத் தாங்கி நிற்கிறார். இங்குள்ள சிவலிங்கம், தன்னகத்தே, கோடி லிங்கங்களை அடக்கியதாக காட்சி தருகிறது. ஒரு முறை மத்ரயோகி என்ற முனிவர், தான் இழந்த தவ பலத்தை திரும்பப் பெறுவதற்காக, கோடி சிவலிங்க தரிசனத்தைக் காண விரும்பினார். அதன்படி இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும் தரிசிக்க வந்தார்.

அப்போது இத்தல இறைவன், தன்னுள் இருந்த கோடி சிவலிங்கத்தை முனிவருக்கு காட்டி அவருக்கு அருள்புரிந்தார். இங்குள்ள பரிவார தெய்வங்கள் அனைத்தும் ‘கோடி’ என்ற அடைமொழியோடே அழைக்கப்படுகின்றன.
Tags:    

Similar News