உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கழுகுமலையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Published On 2022-01-27 09:31 GMT   |   Update On 2022-01-27 09:31 GMT
கழுகுமலை யாதவர் தெருவை சேர்ந்த தொழிலாளியான கிருஷ்ணன் (வயது 38) அவரது மனைவி ராமலெட்சுமி ஆகியோருக்கிடையே கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். நேற்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது அவர் மறுத்தார். இதனால் கிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
 
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை யாதவர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமலெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.  
 
கிருஷ்ணசாமிக்கு குடிப் பழக்கம் உள்ளதாக கூறப் படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கிருஷ்ண சாமி கடந்த ஆண்டு மனை வியை பிரிந்து தந்தையுடன் தென்காசி மாவட்டம் கரிசல்குளத்தில் வசித்து வந்தார். அவ்வப்போது கழுகுமலை வந்து மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று மதியம் கழுகுமலைக்கு வந்த கிருஷ்ணசாமி குடும்பம் நடத்த வருமாறு ராமலெட்சுமியிடம் கூறிஉள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கிருஷ்ணசாமி தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலை ஊற்றி தீ வைத்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த  சப்&இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு கோவில்பட்டி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பின்னர் மேல்சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் கிசிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News