செய்திகள்
காந்தி மார்க்கெட் வெங்காய மண்டி பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை காணலாம்

திருச்சி கடைவீதியில் குவிந்த குப்பைகள்

Published On 2020-11-16 02:36 GMT   |   Update On 2020-11-16 02:36 GMT
தீபாவளி விற்பனை மற்றும் பட்டாசு கழிவுகளால் திருச்சி கடைவீதியில் குப்பைகள் குவிந்தன.
திருச்சி:

தீபாவளி பண்டிகையை யொட்டி திருச்சி என்.எஸ்.பி. சாலை, பெரியகடைவீதி, மலைக்கோட்டை, மெயின் கார்டு கேட், சிங்காரத்தோப்பு, மேலப்புலி வார்டு சாலை ஆகிய கடைவீதிகள் அடங்கி யுள்ள பகுதிகளில் ஜவுளிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடந்த ஒரு வார காலமாக விறுவிறுப்பாக நடந்து வந்தன. தீபாவளிக்கு முதல் நாள் சாலை ஓரங்களிலும் பல்வேறு இடங்களிலும் விடிய விடிய விற்பனை நடந்தது.

தீபாவளியன்று மாலை வரை கூட சில பகுதிகளில் துணிமணிகள் விற்பனை நடந்தன. இதன் காரணமாக அந்த பகுதிகளில் அட்டை பெட்டிகள், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட தேவையில்லாத பொருட்கள் சாலையோரங் களில் குவிந்து கிடந்தன. தீபாவளியன்று மக்கள் உற்சாக மாக பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பல இடங்களில் பட்டாசு கழிவுகளும் அதிக அளவில் குவிந்து கிடந்தன.

இப்படி பல்வேறு பொருட் களால் குப்பை மேடுகள் எல்லாம் குப்பை மலைகள் போல காட்சியளித்தன. நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை லாரிகளில் அள்ளி சென்றனர். கடைவீதி மட்டுமின்றி திருச்சி ஜங்ஷன், பெரிய மிளகுபாறை, பாலக்கரை பகுதிகளிலும் வீடுகளில் இருந்து வெளி யேற்றப்பட்ட காய்கறி கழிவுகள் மற்றும் பட்டாசு கழிவுகள் அதிக அளவில் குவிந்து கிடந்தன. நேற்று மாலை வரை அவை அப்புறப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News