ஆன்மிகம்
பெங்களூரு இஸ்கான் கோவில்

இஸ்கான் கோவிலில் கவுரி பூர்ணிமா பண்டிகை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-03-26 04:45 GMT   |   Update On 2021-03-26 04:45 GMT
பக்தர்கள் இஸ்கான் கோவிலின் இணையதள பக்கம் மூலமும், இஸ்கான் கோவில் யூ-டியூப் சேனல் மூலம் ஆன்லைனில் கவுரி பூர்ணிம பண்டிகை சிறப்பு மற்றும் பூஜைகள், நிகழ்ச்சிகளை பார்த்து சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலியுகத்தில் யுக-தர்மகராக கிருஷ்ணன் அவதரித்தார். அவர் புராணத்தின்படி பால்குன மாதத்தில்(பிப்ரவரி-மார்ச் இடைப்பட்ட காலம்) பூர்ணிமா எனும் ஸ்ரீதாம மாயாபுரத்தில் சைதன்யராக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அவர் சைதன்யராக அவதரித்த தினமே கவுரி பூர்ணிமா பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெங்களூரு கார்ட் ரோட்டில் அமைந்துள்ள இஸ்கான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இங்கு மூலவராக கிருஷ்ணன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இஸ்கான் கோவிலில் கவுரி பூர்ணிமா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கவுரி பூர்ணிமா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இது சைதன்யராக கிருஷ்ணன் அவதரித்த 535-வது ஜெயந்தி விழா ஆகும்.

இந்த விழா வருகிற 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு கோவிலில் தொடங்குகிறது. இதையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக 108 நதிகளில் இருந்து கொண்டுவரப்படும் புனிதநீர் மூலம் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் சைதன்யரின் பல்லக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

அதனால் பக்தர்கள் இஸ்கான் கோவிலின் இணையதள பக்கம் மூலமும், இஸ்கான் கோவில் யூ-டியூப் சேனல் மூலம் ஆன்லைனில் கவுரி பூர்ணிம பண்டிகை சிறப்பு மற்றும் பூஜைகள், நிகழ்ச்சிகளை பார்த்து சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News