செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி மீதான மக்களின் நம்பிக்கை கூட்டணி கட்சிகளுக்கும் பலன் அளிக்கும் -பட்னாவிஸ்

Published On 2020-10-18 10:38 GMT   |   Update On 2020-10-18 10:38 GMT
நாடும் நாட்டு மக்களும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளதாக பீகார் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
பாட்னா:

பீகாரில் வரும் 28-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி கொண்ட மகா கூட்டணிக்கும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 122 இடங்கள் தேவைப்படுகிறது.  

இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாங்கள் பீகாரில் எங்கு சென்றாலும் பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டாலே மக்களிடையே அதிக அளவிலான உற்சாகத்தைக் காணமுடிகிறது. பீகாரில் எங்கு சென்றாலும் பிரதமர் மோடியின் பெயர் பேசப்படுகிறது. 

நாடும் நாட்டு மக்களும் பிரதமர் மோடியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இது பாஜகவிற்கு மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சிகளுக்கும் பலனளிக்கும்’ என்றார்.
Tags:    

Similar News