உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2022-01-11 07:52 GMT   |   Update On 2022-01-11 07:52 GMT
திருவண்ணாமலையில் மத்திய அரசு நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மத்திய அரசு மழையில் சேதமான பயிர்களுக்குநிவாரணம் வழங்காததை கண்டித்தும், மாநில அரசு வழங்கும் குறைந்தபட்ச நிவாரணம் யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது  என்று தெரிவித்தும் விவசாயிகள் பொதுமக்களுக்கு பொரிகொடுக்கும் போராட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தின் போது தலையில் பொரிபொட்டலத்தை வைத்துக் கொண்டு நின்றனர். இந்தப் போராட்டத்திற்கு புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதில் 10&க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால் சம்பா சாகுபடி மணிலா பயிர் வகைகள் தோட்ட பயிர் சேதம் ஆகி உள்ளது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய பார்வைக்கு பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டு 1876 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

 ஆனால் மத்திய அரசு இடைக்கால நீதி வழங்காத நிலையில் மாநில அரசு ரூ.122கோடி வெள்ள நிவாரண நிதி விடுவித்துள்ளது. இதன்மூலம் 2.65 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என அறிவித்துள்ளது.

ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ள நிதியில் பாதிப்பு பரப்பளவு குறித்தும், பயனாளிகளுக்கு சராசரியாக ரூ.5 ஆயிரம் பங்கிட்டு வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. இந்த நிவாரணம் போதாதது.

எனவே‌ மாநில அரசு,மத்திய அரசிடம் நிதி பெற்று கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கிசான் நிதி மோசடி போல சாகுபடி செய்யாதவர்களுக்கு வங்கி கணக்கில் நிதி வழங்குகிறார்களா! என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அப்போது விவசாயிகள் சம்பத், சத்யராஜ், சின்ன பையன், ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News