ஆட்டோமொபைல்
ஹோன்டா ஜாஸ்

நான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது

Published On 2019-10-17 10:57 GMT   |   Update On 2019-10-17 10:57 GMT
ஹோன்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஜாஸ் மாடல் காருக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



ஹோன்டா நிறுவனம் 2020 டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய காருக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய டீசர் அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ் மாடலுக்கானது ஆகும்.

காரின் வெளிப்புறம் தெரியும் படி நேர்த்தியாக காணப்படும் டீசரில் புதிய தலைமுறை ஜாஸ் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதனால் கேபின் இடவசதி அதிகமாக இருக்கும். மேலும் புதிய கார் நான்கு மீட்டர்களுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

நான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் மாடல் டோக்யோ ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய காரின் வடிவமைப்பு அதிகளவு மாற்றங்கள் இன்றி முந்தைய மாடலில் உள்ளதை விட அதிக இடவசதி கொண்டிருக்கும். புதிய ஜாஸ் மாடல் கார் பயணிகளுக்கு சவுகரியத்தை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஐரோப்பியாவில் புதிய ஜாஸ் மாடல் மேம்பட்ட இரண்டு மோட்டார் ஹைப்ரிட் பவர் டிரெயின்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற சந்தைகளில் ஹைப்ரிட் அல்லது பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் பி.எஸ். 6 என்ஜின் கொண்ட வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

இதே என்ஜின் ஹோன்டா அமேஸ் மற்றும் டபுள்.ஆர்.-வி. மாடலிலும் வழங்கப்படலாம். இந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோ டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். புதிய ஹோன்டா ஜாஸ் மாடல் இந்திய சந்தையில் ஹூன்டாய் ஐ20 மற்றும் மாருதி சுசுகி பலேனோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Tags:    

Similar News