ஆன்மிகம்
திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில்

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை

Published On 2021-09-06 08:13 GMT   |   Update On 2021-09-06 08:13 GMT
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 9-ந்தேதியில் இருந்து மீண்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் யானைகள் இடம் பெயர்ந்து, நம்பி கோவில் சாலையில் உலா வந்ததால் மீண்டும் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகிலேயே பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் உறியடி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 11-ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News