செய்திகள்
அங்கீத் சவான்

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் பெற்ற ஆயுட்கால தடையை நீக்க வேண்டும்: பிசிசிஐ-க்கு அங்கீத் சவான் கோரிக்கை

Published On 2020-07-03 09:49 GMT   |   Update On 2020-07-03 09:49 GMT
தனது மீதான ஆயுட்கால தண்டனையை குறைக்க வேண்டும் என்று அங்கீத் சவான், பிசிசிஐ மற்றும் மும்பை கிரிக்கடெ் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியின்போது சூதாட்டம் நடந்ததை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய ஸ்ரீசந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆயுட்கால தடை விதித்தது.

இதற்கிடையே 3 வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி டெல்லி கோர்ட்டு 2015-ம் ஆண்டு அவர்களை விடுவித்தது. ஆனால் கிரிக்கெட் வாரியம் அவர்கள் மீதான தடையை நீக்க மறுத்துவிட்டது.

ஸ்ரீசந்த் சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டு தடையை 7 ஆண்டாக குறைத்தார். இதனால் அவரது தடை செப்டம்பர் மாதத்துடன் முடிகிறது. இதன் காரணமாக ஸ்ரீசந்த் கேரள உள்ளூர் போட்டிக்கான தேர்வு அணிக்கு தேர்வாகியுள்ளார்.

இந்த நிலையில் தன் மீதான ஆயுட்கால தடையை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் அங்த் சவான் வலியுறுத்தியுள்ளார். அவர் ஏற்கனவே மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தனக்கு உதவுமாறு கேட்டு இருந்தார். தற்போது 2-வது முறையாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். அங்கீத் சவான் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில்  விளையாடி இருக்கிறார்.
Tags:    

Similar News