செய்திகள்
கோப்புப்படம்

ஆண்-பெண் சமத்துவத்தில் சத்தீஷ்கார் முதலிடம்

Published On 2021-06-14 19:30 GMT   |   Update On 2021-06-14 19:30 GMT
ஆண்-பெண் சமத்துவம் என்ற அம்சத்தில் சத்தீஷ்கார் முந்தைய நிதியாண்டில் 43 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:

கடந்த நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் விவகாரங்களில் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் ‘நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண்’ அறிக்கையை ‘நிதி ஆயோக்’ அமைப்பு தயாரித்துள்ளது. ஐ.நா.வுடன் இணைந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், ஆண்-பெண் சமத்துவம் என்ற அம்சத்தில் சத்தீஷ்கார் மாநிலம் 61 புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. முந்தைய நிதியாண்டில், சத்தீஷ்கார் 43 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமச்சீரான ஆண்-பெண் பிறப்பு விகிதம், சம ஊதியம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறை குறைவு ஆகியவற்றால் சத்தீஷ்கார் முதலிடம் பிடித்துள்ளது.
Tags:    

Similar News