செய்திகள்
வைரல் புகைப்படம்

பிரதமர் மோடி பிறந்தநாளை தப்லீக் ஜமாஅத் கொண்டாடியதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2020-09-23 04:59 GMT   |   Update On 2020-09-23 04:59 GMT
பிரதமர் மோடியின் பிறந்தநாளை தப்லீக் ஜமாஅத் கொண்டாடியதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17 ஆம் தேதி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடன் பாஜக தொண்டர்களும் நாடு முழுக்க கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், பிரதமர் மோடியின் பிரம்மாண்ட படத்தின் முன் முஸ்லீம் மதத்தவர் ஒன்று கூடி பிரார்த்தனை செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தப்லீக் ஜமாஅத் டெல்லியில் உள்ள சர்வதேச தலைமையகமான நிசாமுதீன் மர்கசில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த புகைப்படம் பாஜகவை சேர்ந்த சுஹெய்ப் கௌஸ்மி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டது ஆகும். கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக நிசாமுதீன் மர்கஸ் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தப்லீக் ஜமாஅத் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News