செய்திகள்
தீ விபத்து

கும்பகோணத்தில் டிராவல்ஸ் ஏஜென்சியில் தீ விபத்து

Published On 2021-05-01 10:05 GMT   |   Update On 2021-05-01 10:05 GMT
கும்பகோணத்தில் டிராவல்ஸ் ஏஜென்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கும்பகோணம்:

கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே 60 அடி சாலையில் டிராவல்ஸ் நிறுவனத்தை அண்ணாதுரை என்பவர் நடத்தி வருகிறார். இந்த டிராவல்ஸ் தலைமை அலுவலகம் கோயம்புத்தூரில் உள்ளது. தினசரி கும்பகோணத்தில் இருந்து சென்னை மற்றும் சென்னையில் இருந்து கும்பகோணம் செல்வதற்கான டிக்கெட் புக்கிங் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் வெளிநாட்டில் இருந்து பார்சல் வரக்கூடிய பொருட்கள் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்கும் மற்றும் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு எடுத்து வருவதற்கு புக்கிங் செய்யப்படுகிறது.

இப்பொருட்கள் டிராவல்ஸ் பகுதியிலேயே இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரைமணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். உரிய நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் டிராவல்ஸ் பின்புறத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடிசைகள் தப்பின. இருப்பினும் டிராவல்சில் இருந்த கணினி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மற்றும் பார்சல், புக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் என சுமார் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News