தொழில்நுட்பம்

இந்தியாவில் ரூ.1500 விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

Published On 2019-04-05 06:42 GMT   |   Update On 2019-04-05 06:42 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 1, நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. #Nokia



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 1, நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.1,500 குறைப்பதாக அறிவித்துள்ளது. 

இத்துடன் நோக்கியா 6.1 பிளஸ் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 15 சதவிகிதம் கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் சலுகை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.3,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
தற்போதைய விலை குறைப்பின் மூலம் இந்தியாவின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக நோக்கியா 1 இருக்கிறது. 



இதுமட்டுமின்றி விலைகுறைப்பு காரணமாக நோக்கியா 1 மாடல் ரெட்மி கோ மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. 

நோக்கியா 1 மாடலுடன் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.5499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.16,999 விலையில் கிடைக்கிறது. 

முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,499 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. விலை குறைப்பு மட்டுமின்றி ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News