உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டபோது எடுத்த படம்.

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 25 ஆயிரத்து 701 பேருக்கு தடுப்பூசி - கலெக்டர் தகவல்

Published On 2021-12-02 13:11 GMT   |   Update On 2021-12-02 13:11 GMT
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 25 ஆயிரத்து 701 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
சிவகங்கை:

சிவகங்கை பொது சுகாதாரத்துறையின் மூலம் 12-ம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்றது. சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் இதுவரை மொத்தம் 12 லட்சத்து 25 ஆயிரத்து 701 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 628 பேர் முதல் தவணை ஊசி போட்டு உள்ளனர். 4 லட்சத்து 41 ஆயிரத்து 73 பேர் 2 தடவை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை நடைபெற்ற 11 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் மட்டும் 3,46,781 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

நிகழ்ச்சியில் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பால சுப்பிரமணியன், தாசில்தார் தர்மலிங்கம், சுகாதார ஆய்வாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News