செய்திகள்
கங்குலி - எம்எஸ் டோனி

டோனி எதிர்காலம் குறித்து 24-ந்தேதி ஆலோசனை - கங்குலி

Published On 2019-10-17 09:03 GMT   |   Update On 2019-10-17 09:03 GMT
டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் 24-ந்தேதி ஆலோசிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தகவல் வெளியானது. ஆனால் உலக கோப்பைக்கு பிறகு 2 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக டோனி கூறி சென்றார்.

டோனியின் எதிர்காலம் குறித்தும் ஓய்வுபெறுவது குறித்தும் அவரே முடிவு எடுப்பார் என்றும் அவரை ஓய்வுபெற வற்புறுத்தக்கூடாது என்றும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். மேலும் ஒய்வு குறித்து டோனியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறும்போது, ‘டோனியின் எதிர்காலம் குறித்து 24-ந்தேதி ஆலோசிக்கப்படும்‘ என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினரை வருகிற 24-ந்தேதி சந்தித்து ஆலோசனை நடத்துகிறேன். அப்போது டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினர் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கேட்டறிவேன்.

அதன்பின்னர் எனது கருத்தை தெரிவிப்பேன். மேலும் டோனியுடனும் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

24-ந்தேதி தான் வங்காளதேசத்துக்கு எதிராக 20 ஓவர் போட்டிக்காக இந்திய அணி அறிவிக்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கு டோனி தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News