உள்ளூர் செய்திகள்
பாம்பை வனத்துறையினர் மீட்ட போது எடுத்த படம்

கன்னியாகுமரியில் கார் சர்வீஸ் சென்டரில் புகுந்த நல்லபாம்பு

Published On 2022-01-13 10:21 GMT   |   Update On 2022-01-13 10:21 GMT
கன்னியாகுமரி அருகே கார் சர்வீஸ் சென்டரில் நல்ல பாம்பு புகுந்தது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே கார் சர்வீஸ் சென்டரில் புகுந்த நல்ல பாம்பை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள அரசு பழத்தோட்டம் பகுதியை அடுத்து உள்ள பரமார்த்தலிங்கபுரத்தில் தனியார் கார் சர்வீஸ் சென்டர் ஒன்றுஉள்ளது.இந்தகார்சர்வீஸ்சென்டரில் அடுக்கி வைக்க பட்டிருந்த செங்கல்களை இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் நகர்த்தினார்கள்.அப்போது நல்ல பாம்பு ஒன்று சீறிபாய்ந்தது.

இதைக்கண்டு அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.பின்னர்அந்தகார்சர்வீஸ்சென்டரின்உரிமையாளர் நாகர்கோவிலில் உள்ள வனக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பூதப்பாண்டி வனச்சரக அலுவலக வனச்சரகர் திலீபன் உத்தரவு படி மருந்துவாழ்மலை வனக் காப்பாளர் பிரபாகர், வனக் காவலர் ஜோயல் வேட்டைதடுப்புக்காவலர் பிரவின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த கார்சர்வீஸ் சென்டரில் பதுங்கி இருந்தநல்லபாம்பு அங்குஇருந்து வெளியேறி ரோட்டின் குறுக்கே பாய்ந்து தப்பிக்க முயன்றது. உடனே வனத்துறையினர் அந்த நல்ல பாம்பினை லாவகமாக பிடித்தனர். 

பின்னர் தெற்கு மலையில்உள்ள பாதுகாப்பான காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.
Tags:    

Similar News