செய்திகள்
விபத்து பலி

டெக்ஸ்டைல் ஊழியர் கார் மோதி பலி

Published On 2021-10-01 09:28 GMT   |   Update On 2021-10-01 09:28 GMT
கார் மோதி டெக்ஸ்டைல் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.பரமத்தி:

திருப்பூர் மாவட்டம், தெற்குப்பாளையம் மேடு பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 40), டெக்ஸ்டைல் ஊழியர். இவர் தனது சொந்த ஊரான திருச்சிக்கு சென்று விட்டு அங்குள்ள தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். தென்னிலை அருகே கரூர்-கோவை சாலையில் உள்ள மலைக்கோவில் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தென்னிலை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News