செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கொடிமரம் தயாராக உள்ளதை காணலாம்.

திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டு விழா 25-ந்தேதி நடக்கிறது

Published On 2021-01-15 04:02 GMT   |   Update On 2021-01-15 04:02 GMT
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டுவிழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
திருவட்டார்:

குமரி மாவட்டம் திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 13 மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகவும் இந்த கோவில் திகழ்கிறது.

இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 416 ஆண்டுகள் ஆகிறது. எனவே, கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறையும் பக்தர்கள் சங்கமும் முயற்சி மேற்கொண்டனர்.

இதையடுத்து திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தொடங்கின. மேலும் 2007-ம் ஆண்டு முதல் இங்கு திருப்பணிகள் நடந்து வருகிறது.

திருப்பணிகளை முடித்து இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக கோவிலில் புதிய கொடிமரம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக கேரளாவில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன் கொடிமரம் கொண்டு வரப்பட்டு அது எண்ணெய் தொட்டியில் போடப்பட்டுள்ளது. தற்போது கொடிமரத்தை நிறுவும் பணிகள் தொடங்கி உள்ளது. அதன்படி வருகிற 25-ந் தேதி கொடிமரம் நாட்டப்பட உள்ளது.

கொடிமரம் நாட்டும் விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பு, காலை 6 மணி முதல் ஸத்சங்க நாமம், 7 மணிக்கு கொடிமர சடங்குகள், 9.50 முதல் 10.20 மணிக்குள் கொடிமரம் நடப்படுகிறது. தொடர்ந்து ராமநாத பிரார்த்தனை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News