செய்திகள்
வைரலாகும் சிறுவன் புகைப்படம்

தங்கையை காக்கும் சிறுவனின் வைரல் புகைப்படம் - இது அங்கு எடுக்கப்பட்டதா?

Published On 2019-11-06 05:38 GMT   |   Update On 2019-11-06 05:38 GMT
தங்கையை காப்பாற்றும் சிறுவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது உண்மையில் அங்கு எடுக்கப்பட்டதா என தொடர்ந்து பார்ப்போம்.



சிறுவன் தனது தங்கையை பாதுகாக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டதாகவும், துப்பாக்கி சூட்டின் போது சிறுவன் தன் தங்கையை காப்பதாக கூறப்படுகிறது.  

ஆய்வில் இந்த புகைப்படம் நான்காண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது ஆகும். மேலும் இந்த புகைப்படம் சிரியாவில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபேஸ்புக்கில் இந்த புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் நிலையில், சிலர் இந்த புகைப்படம் சிரியாவில் எடுக்கப்பட்டது என கமென்ட் செய்து வருகின்றனர்.



தற்சமயம் வைரலாகும் இந்த புகைப்படம் உண்மையில் ஜூன் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது சிறுவன் தங்கையை பாதுகாக்கும் போது எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

வைரல் புகைப்படத்துடன் செய்திகளும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று வெளியான செய்திகளில் சிரியா என்ற வார்த்தைக்கு பதிலாக காஷ்மீர் என மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் வைரல் பதிவுகள் உண்மையில்லை என உறுதியாகி விட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News