செய்திகள்

முதன்முறையாக கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுகிறார் ஸ்டீவ் ஸ்மித்

Published On 2018-07-25 10:24 GMT   |   Update On 2018-07-25 12:12 GMT
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதன்முறையாக கரிபியன் பிரீமியர் லீக் தொடர் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். #CPL #Smith
ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாகவும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஸ்மித். இந்த வருடம் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது மார்ச் மாதம் கேப்படவுனில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார்.

இதுதொடர்பான விசாரணையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருந்து வருகிறார். ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிக குறைவான லெவல் தொடர்களிலும், வெளிநாட்டு லீ்க் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.



முதன்முதலாக கனடா குளோபல் டி20 லீக்கில் விளையாடினார். அதன் தற்போது கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

அந்த அணியில் இடம்பிடித்திருந்தது வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் விலகியதால் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 155 டி20 போட்டிகளில் விளையாடி 3124 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 30.03 ஆகும்.
Tags:    

Similar News