செய்திகள்
குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர்

குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு

Published On 2021-09-23 12:19 GMT   |   Update On 2021-09-23 13:18 GMT
தமிழக ஆளுநராக பதவி ஏற்ற நிலையில், ஆர்.என். ரவி டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
ஆர்.என். ரவி  தமிழக ஆளுநராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநராக பொறுப்பேற்ற நிலையில் முதன்முறையாக இன்று காலை அவர் டெல்லிக்கு சென்றார்.

இன்று மாலை 5.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்-ஐ தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்தார். நாளை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆர்.என்.ரவி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


Tags:    

Similar News