செய்திகள்

புன்னம்சத்திரம் சேரன் பள்ளியில் விளையாட்டு விழா

Published On 2019-01-13 13:51 GMT   |   Update On 2019-01-13 13:54 GMT
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடை பெற்றது.

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடை பெற்றது. சேரன் பள்ளிகளின் தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். சேரன் பள்ளிகளின் தாளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்அமலி டெய்சி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்கவர் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாணவர்கள் விளையாட்டையும் கல்வியையும் கண்களாக கொள்ள வேண்டும்.பெண்கள் கல்வி பெற வேண்டும் என்றார்.

விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றும் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தும் சேரன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன் பேசினார்.

சேரன் விடுதி தாளாளர் சித்ரா பாண்டியன், சேரன் பள்ளிகளின் நிர்வாக அலுவலர் கணபதி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். மாநில போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பு விருந்தினர் பாராட்டினார். பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளும், வண்ண மயமான அணிவகுப்பும், ஒலிம்பிக் சுடர் ஓட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் சேரன் பள்ளிகளின் தாளாளர் பெரியசாமி , ஹரிகீர்த்தன், தரணிஹரிகீர்த்தன் மற்றும் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனியப்பன் , புன்னம்சத்திரம் சேரன் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சு.சுமதி, சேரன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளியின் தமிழா சிரியர் உமையொருபாகம் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன் , மெட்ரிக் பள்ளி முதல்வர் பாஸ்கர் வழிகாட்டுதலோடு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களும், யோகா ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News