ஆட்டோமொபைல்
ஃபோர்டு பிகோ

ஃபோர்டு பிகோ பெட்ரோல் ஆட்டோமேடிக் வெளியீட்டு விவரம்

Published On 2020-07-20 08:27 GMT   |   Update On 2020-07-20 08:27 GMT
ஃபோர்டு நிறுவனத்தின் பிகோ பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

ஃபோர்டு நிறுவனம் தனது பிகோ ஹேட்ச்பேக் மாடலின் 1.2 லிட்டர் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரில் ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்ட 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய 1.2 லிட்டர் டிராகன் என்ஜின் முந்தைய 1194சிசி என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 96 ஹெச்பி திறன்  வழங்குகிறது. புதிய என்ஜினுடன் பேடில்ஷாப்டர்களும் பிகோ மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த வேரியண்ட் ஆகஸ்ட் மாத இறுதியில் அறிமுகமாகும் என தெரிகிறது.



ஃபோர்டு பிகோ பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 8 லட்சம் முதல் ரூ. 8.3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஃபோர்டு நிறுவனம் தனது பிகோ பேஸ்லிப்ட் மாடலை 2019 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த காரில் ரீடொன் கிரில், புதிய சின், சி வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பின்புற பம்ப்பர் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 

புதிய பிகோ வேரியண்ட் மூன்றாவது வெர்ஷன் ஆகும். முன்னதாக பிகோ மாடலில் 123 ஹெச்பி வழங்கும் 1497சிசி பெட்ரோல் என்ஜின் மற்றும் 110 ஹெச்பி திறன் வழங்கும் 1499 சிசி 4 சிலிண்டர் பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News