உலகம்
சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் மிக நீள மெட்ரோ ரெயில் பாதை திறப்பு

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் மிக நீள மெட்ரோ ரெயில் பாதை திறப்பு

Published On 2021-12-31 04:02 GMT   |   Update On 2021-12-31 04:02 GMT
ஷாங்காய் நகரில் மட்டுமே 508 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. ஷாங்காயைத் தொடர்ந்து பீஜிங் இரண்டாவது பெரிய சுரங்க ரெயில்பாதையை கொண்டுள்ளது.
ஷாங்காய் :

உலகின் மிக நீளமான மெட்ரோ ரெயில் பாதை சீனாவின் ஷாங்காய் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. லைன் 14 மற்றும் லைன் 18 என்னும் இந்த 2 வழித்தடங்கள் என்ஜின் டிரைவர் இன்றி இயக்கும் ரெயில்கள் ஓடும் தடங்கள் ஆகும்.

இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று ஒரு பயணி தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய மெட்ரோ ரெயில் பாதைகள் திறப்பு விழாவுடன் ஷாங்காய் சுரங்கப்பாதை 831 கி.மீ. நீளத்துக்கு விரிவடைந்துள்ளது. இந்த தடத்தில் தானியங்கி அல்லது என்ஜின் டிரைவர் இன்றி இயக்கும் மெட்ரோ ரெயில் பாதைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஷாங்காய் நகரில் மட்டுமே 508 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன.

ஷாங்காயைத் தொடர்ந்து பீஜிங் இரண்டாவது பெரிய சுரங்க ரெயில்பாதையை கொண்டுள்ளது. இதன் நீளம் 780 கி.மீ. ஆகும்.

உலகின் 3-வது நீள மெட்ரோ ரெயில் நெட்வொர்க் என டெல்லி சமீபத்தில் தர வரிசைப்படுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News