செய்திகள்
ராதாகிருஷ்ணன்

மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 18 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ராதாகிருஷ்ணன் தகவல்

Published On 2021-10-04 01:58 GMT   |   Update On 2021-10-04 01:58 GMT
மழை காலத்தை கருத்தில் கொண்டு கொரோனா மட்டும் இல்லாமல், அனைத்து வகையான தொற்று நோய்களுக்கும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை :

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மட்டும் 18 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் மழை காரணமாக சிறிய சுணக்கம் ஏற்பட்டது உண்மை தான். மழை காலத்தில் 25 லட்சம் இலக்கை எட்டாவிட்டாலும் 17.19 லட்சம் செலுத்தியது வரவேற்புக்குரியது.

தமிழகத்தில் முதியோர்கள் 1.4 கோடி பேர் உள்ளனர். இதில் 42 சதவீதம் பேர் முதல் தவணையும், 18 சதவீதம் பேர் 2-வது தவணையும் செலுத்தி உள்ளனர். அடையாள அட்டை இல்லாதவர்கள், வசிப்பிடம் இல்லாதவர்கள், மனநிலை குன்றியவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தி வருகிறோம். மழை காலத்தை கருத்தில் கொண்டு கொரோனா மட்டும் இல்லாமல், அனைத்து வகையான தொற்று நோய்களுக்கும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும் பொதுமக்களும் தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News