செய்திகள்
ஊட்டியில் கடும் உறைபனி

ஊட்டியில் கடும் உறைபனி- வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசாக குறைந்தது

Published On 2021-01-28 01:43 GMT   |   Update On 2021-01-28 01:43 GMT
கடும் உறைபனி காரணமாக ஊட்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், குதிரை பந்தய மைதானம், காந்தல் விளையாட்டு மைதானம், எச்.பி.எப்., தலைகுந்தா, பைக்காரா, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் புல்வெளிகளின் மீது வெள்ளை போர்வையை போர்த்தியது போல உறைபனி படர்ந்து இருந்தது.

இதனால் பச்சை பசேல் என காணப்பட்ட புல்வெளிகள் எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறத்தில் காட்சி அளித்தது.

ஊட்டியில் நேற்று முன்தினம் அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. உறைபனி காரணமாக ஊட்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News