செய்திகள்
ராகுல்காந்தி

வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்- ராகுல்காந்தி பேச்சு

Published On 2021-02-23 10:49 GMT   |   Update On 2021-02-23 10:49 GMT
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யான ராகுல்காந்தி, அந்த தொகுதியில் அவ்வப்போது சுற்றுப்பயணம் சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். நேற்று அவர் வயநாடு தொகுதியில் முத்தில் என்ற இடத்தில் டிராக்டரில் பேரணியாக சென்று மக்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் உள்ள விவசாயிகளை ஏமாற்றி, அவர்களிடமிருந்து விவசாயத்தை பறித்து தனது உறவினர்கள் 2 பேருக்கு பரிசாக கொடுக்க பிரதமர் மோடி நினைக்கிறார். லட்சக்கணக்கான மக்களின் உயிர் நாடியான விவசாயத்தை அவர் மதிக்க வில்லை.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை நைடைமுறைப்படுத்தினால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் போராட்டம் பற்றி மோடிக்கு எந்த கவலையும் இல்லை. புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி, அதனை மக்களுக்கு நியாயமான விலைக்கு விற்க முடியாமல் போகும் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், விவசாயிகள் தங்களின் பிரச்சினைக்காக கோர்ட்டுக்கு செல்ல முடியாது.

விவசாயிகளுக்கு எதிரான, அவர்களை பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். இந்த வி‌ஷயத்தில் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் சேர்ந்து போராடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News