தொழில்நுட்பம்
சாம்சங் ஸ்மார்ட்போன்

பட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2021-04-10 07:53 GMT   |   Update On 2021-04-10 07:53 GMT
சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


சாம்சங் நிறுவனம் இந்திய  சந்தையில் புதிய கேலக்ஸி எம் மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பட்டியலில் கேலக்ஸி எம்42 5ஜி மாடலும் ஒன்று. 

சமீபத்தில் கேலக்ஸி எம்42 5ஜி மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய 5ஜி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம்  செய்யப்படலாம் என கூறப்படுகிறது.



கேலக்ஸி எம்42 5ஜி மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி யு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ, புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 20 எம்பி செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News