தொழில்நுட்பம்
டிம் குக்

அமெரிக்க அதிபருக்கு ஆப்பிள் சிஇஒ டிம் குக் கடிதம்

Published On 2021-01-30 06:54 GMT   |   Update On 2021-01-30 06:54 GMT
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஆப்பிள் சிஇஒ டிம் குக் கடிதம் எழுதியுள்ளார். இதன் விவரங்களை பார்ப்போம்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்று சில நாட்களே நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் புதிய அதிபருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கைகளுக்கு பாராட்டு மற்றும் எதிர்ப்பு என பலதரப்பட்ட கருத்துக்களை டிம் குக் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அந்த வகையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளை டிம் குக் பாராட்டி உள்ளார். ஆப்பிள் சிஇஒ மட்டுமின்றி டிம் குக் பிஸ்னஸ் ரவுண்ட்-டேபிள் எனும் அமைப்பின் நிர்வாக இயக்குனராகவும் பதவி வகிக்கிறார்.



இந்த அமைப்பு அமெரிக்காவில் கொரோனாவைரஸ் பாதிப்பை தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அமெரிக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மை உள்ளிட்டவைகளுக்கு ஆதரவான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக டிம் குக் பைடனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

டிம் குக் எழுதியிருக்கும் கடிதத்தில், 

“இந்த பிரச்சினை மட்டுமின்றி நம் நாட்டை மேம்பட்ட, ஒருங்கிணைந்த மற்றும் வளமிக்கதாக மாற்ற உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறோம்.” 

என தெரிவித்து இருக்கிறார்.
Tags:    

Similar News