ஆட்டோமொபைல்
ரெனால்ட் கைகர்

ரெனால்ட் கைகர் எஸ்யுவி கான்செப்ட் அறிமுகம்

Published On 2020-11-19 09:48 GMT   |   Update On 2020-11-19 09:48 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் எஸ்யுவி கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது பி எஸ்யுவி மாடலின் கான்செப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் கைகர் எனும் பெயரில் அறிமுகமாகிறது. ரெனால்ட் கைகர் மாடல் முதற்கட்டமாக இந்தியாவிலும் அதன்பின் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

புதிய கைகர் மாடல் CMFA+ பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது ரெனால்ட் - நிசான் - மிட்சுபிஷி கூட்டணியின் பேரில் உருவாகிறது. நிசான் மேக்னைட் மாடலும் இதே பிளாட்பார்மில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.



ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடலில் பிரம்மாண்ட தோற்றம், ஏ பில்லர், உயர்த்தப்பட்ட பொனெட் லைன் கொண்டிருக்கிறது. முன்புறம் 2 ஸ்கேல் எல்இடி ஹெட்லைட்கள், 2 ஸ்லாட் கிரில் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட லைட்கள் பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது. பம்ப்பரின் கீழ்புறம் மெஷ் போன்ற ஏர் இன்டேக் மற்றும் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News