ஆன்மிகம்
செயல்அலுவலர் விஷ்ணுசந்திரன், காப்புகட்டிய பட்டரிடம் தாம்பூலம் கொடுத்து நிர்வாக அனுமதி வழங்கியபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2021-02-16 03:09 GMT   |   Update On 2021-02-16 03:09 GMT
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

மாசித்திருவிழாவை முன்னிட்டு நேற்று சிவன் கோவிலில் வைத்து செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன், காப்புகட்டிய பட்டர் சந்தோஷ்குமாரிடம் தாம்பூலம் கொடுத்து நிர்வாக அனுமதி வழங்கினார்.

நிகழ்ச்சியில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News