ஆட்டோமொபைல்

ஒரே மாதத்தில் 500 பேர் முன்பதிவு செய்த ஆடி கார்

Published On 2018-02-21 10:45 GMT   |   Update On 2018-02-21 10:45 GMT
ஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தில் 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:

ஆடி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டாம் தலமுறை கியூ5 மாடல் ஒரே மாதத்தில் 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் ஜனவரி 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய ஆடி கியூ5 பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஆடி கியூ7 மற்றும் புதிய கியூ5 MLB Evo பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 100 கிலோ வரை எடை குறைவு ஆகும். இந்தியாவில் ஆடி கியூ5 பி.எம்.டபுள்யூ. X3, மெர்சிடிஸ் பென்ஸ் GLC, லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் புதிய வால்வோ XC60 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

புதிய ஆடி கியூ 5 2.0 லிட்டர் TDI இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 190 பி.எஸ். 400 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு எஸ்-டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. புதிய ஆடி கியூ5 மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.9 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ARAI சான்று பெற்றிருப்பதால் லிட்டருக்கு 17.01 கிலோமீட்டர் செல்லும் என ஆடி தெரிவித்துள்ளது.



இத்துடன் டைனமிக், ஆட்டோ, கம்ஃபர்ட், இன்டிவிடுவல் மற்றும் ஆஃப்ரோடு போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. முந்தை ஆடி கியூ 5 மாடலை விட 65 கிலோ எடை குறைவாக இருக்கும் புதிய மாடலில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டும் போது ஹேன்ட்லிங் மற்றும் அனுபவத்தை சிறப்பாக வழங்கும். 

ஆடி கியூ 5 பிரீமியம் பிளஸ் 35 TDI விலை ரூ.53.25 லட்சம் மற்றும் ஆடி கியூ5 தொழில்நுட்பம் TDI விலை ரூ.57.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆடி கியூ5 மாடலில் செவ்வக வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட், பக்கவாட்டுகளில் வளைந்த கோடுகளை கொண்டிருக்கிறது.  

முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கும் புதிய ஆடி கியூ5 உள்புறத்தில் 12.3 இனஅச் டி.எஃப்டி டிஸ்ப்ளே, 8.3 இன்ச் டிஸ்ப்ளே டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருக்கைகள் பெய்க்-நிறத்திலான லெதர் மற்றும் பெரிய பானாரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News