லைஃப்ஸ்டைல்
செம்பருத்தி டீ

உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் செம்பருத்தி டீ

Published On 2020-12-02 05:28 GMT   |   Update On 2020-12-02 05:28 GMT
செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.
உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) - 5 இதழ்
தண்ணீர் 1 கப் - 150 ml
நாட்டு சர்க்கரை அல்லது தேன் -1 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். 

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு 5 நிமிடங்கள் கொதித்தபின் வடிக்கட்டி நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும்.

ஒரு நாளைக்கு 2 - 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News