உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவை மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று 1919 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

Published On 2022-01-24 09:05 GMT   |   Update On 2022-01-24 09:05 GMT
வீடு, வீடாக சென்று முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை:

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. வாரந்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாமில் இலக்கு நிர்ண யிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணைநோயாளிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

கோவை மாநகராட்சி பகுதிகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இந்தநிலையில் மாநகராட்சி பகுதியில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 

மேலும் தடுப்பூசி முகாம்களுக்கு செல்ல முடியாத முதியவர்கள்,  இணை நோயாளிகளுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி முகாமுக்கு செல்ல முடியாத முதியவர்கள் மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

பின்னர் அவர்களிடம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான நேரம் அவர்களிடம் கேட்கப்பட்டு, அவர்கள் கூறும் நாளில் சுகாதாரப் பணியாளர்கள் நேரடியாக முதியவர்களின் வீடுகளுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அந்த பணி கடந்த 10-ந் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக  தெற்கு மண்ட லத்தில் 10 வாகனங்களும், மற்ற 4  மண்டலங்களுக்கு 9 வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சியில் இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் முகாம்களுக்கு செல்ல முடியாதவர்கள் 1919 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News