செய்திகள்
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி பேருக்கு தடுப்பூசி

Published On 2021-04-15 21:24 GMT   |   Update On 2021-04-15 21:24 GMT
இந்தியாவில் ஏப்ரல் 11 முதல் 14 வரையில் தடுப்பூசி திருவிழா அறிவித்து, தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
புதுடெல்லி:

இந்தியாவில் ஏப்ரல் 11 முதல் 14 வரையில் தடுப்பூசி திருவிழா அறிவித்து, தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி தேசிய அளவில் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. இந்த தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் (11-ந் தேதி) 29 லட்சத்து 33 ஆயிரத்து 418 டோஸ்களும், 12-ந் தேதி 40 லட்சத்து 4 ஆயிரத்து 521 டோஸ்களும், 13-ந் தேதி 26 லட்சத்து 46 ஆயிரத்து 528 டோஸ்களும், 14-ந் தேதி 33 லட்சத்து 13 ஆயிரத்து 848 டோஸ்களும் போடப்பட்டுள்ளன.



மொத்தமாக இந்த 4 நாளில் 1 கோடியே 28 லட்சத்து 98 ஆயிரத்து 314 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையின்போது சுமார் 16 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசி திருவிழாவின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்றபோதும், பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டதால் 29 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News