தொழில்நுட்பம்
ரெட்மி

பட்ஜெட் விலையில் உருவாகும் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2020-04-30 08:59 GMT   |   Update On 2020-04-30 08:59 GMT
சியோமியின் ரெட்மி பிராண்டு டிமென்சிட்டி பிராசஸர்கள் கொண்ட ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும், இவை சீனாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீன சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை மட்டும் வெளியிட சியோமி திட்டமிட்டிருப்பதால், இரு மாடல்களை வெளியிட இருக்கிறது. ரெட்மியின் இரு மாடல்களும் M2004J7AC மற்றும் M2004J7BC எனும் மாடல் நம்பர்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இவற்றில் முறையே 22.5 வாட் மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன்கள் 3சி சான்று பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவை ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.



இதுதவிர மீடியாடெக் நிறுவனம் மே 7 ஆம் தேதி தனது புதிய டிமென்சிட்டி சிப்செட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை டிமென்சிட்டி 800 பிளஸ் பிராசஸராக இருக்கும் என கூறப்படுகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட டிமென்சிட்டி 800 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய டிமென்சிட்டி 800 பிளஸ் 2.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய டிமென்சிட்டி 800 பிராசஸர் 2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. புதிய ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் முறையே டிமென்சிட்டி 800 மற்றும் 800 பிளஸ் பிராசஸர்கள் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News