தொழில்நுட்பம்
ஐபோன் 12 டம்மி

இணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 டம்மி

Published On 2020-08-20 05:38 GMT   |   Update On 2020-08-20 05:38 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 டம்மி இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன் புதிய ஐபோன் 12 சீரிஸ் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில், தற்சமயம் ஐபோன் 12 டம்மி புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இவை ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்பதை தெரியப்படுத்தி உள்ளன. இந்த புகைப்படங்கள் இஸ்ரேல் நாட்டு வலைதளம் மூலம் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. 

அதன்படி புதிய ஐபோன் 12 ஃபிளாட் எட்ஜ் டிசைன் கொண்டிருக்கின்றன. இந்த வடிவமைப்பு ஐபோன் 4 சீரிஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று டம்மி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கையான ஒன்று தான்.

டம்மி யூனிட்களை ஸ்மார்ட்போன் கேஸ் உற்பத்தி செய்வோர் பயன்படுத்துகின்றனர். இவை ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டுக்கு முன்பே உற்பத்தி செய்யப்படுகின்றன. சில கேஸ் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே ஆப்பிள் ஐபோன் 12 கேஸ்களை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.



இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐபோன் 12 பேஸ் வேரியண்ட் 5.4 இன்ச் BOE OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே பயன்படுத்தும் என்றும் இது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் அலுமினியம் பாடி, புதிய ஏ14 சிப், டூயல் கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஐபோன் 12 மேக்ஸ் வேரியண்ட்டில் 6.1 இன்ச் BOE OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் அலுமினியம் பாடி, புதிய ஏ14 சிப், டூயல் கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஐபோன் 12 ப்ரோ வேரியண்ட் 6.1 இன்ச் BOE OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி, புதிய ஏ14 சிப், மூன்று கேமராக்கள் மற்றும் LiDAR சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் வேரியண்ட்டில் 6.7 இன்ச் சாம்சங் OLED சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி, புதிய ஏ14 சிப், மூன்று கேமராக்கள் மற்றும் LiDAR சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News