தமிழ்நாடு
.

புதன்சந்தையில் மாடுகள் விலை உயர்வு

Published On 2022-01-12 06:15 GMT   |   Update On 2022-01-12 06:15 GMT
புதன்சந்தையில் மாடுகள் விலை அதிகரித்து காணப்பட்டது.
நாமக்கல்:

புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும். 

இச்சந்தையில் மாடுகளை வாங்க விற்க ஆந்திரா, கர்நாடகம், கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருவர். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.

நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கேரளாவில் குளிர் காலத்தையொட்டி இறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் கேரளாவிலிருந்து மாடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

இதனால் விலை உயர்ந்தது இறைச்சி மாடுகள் ரூ. 25 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ரூ. 45ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ரூ. 12 ஆயிரத்திற்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
Tags:    

Similar News