உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு

Published On 2022-01-08 12:21 GMT   |   Update On 2022-01-08 12:21 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. கட்டுபாட்டுகளுடன் கூடிய தளர்வுகளால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பில் பாடங்கள் நடத்தப்பட்டன. தற்போது மீ்ண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி கல்வி வட்டாரத்தில் உள்ள 124 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் பயிலும் 14 ஆயிரத்து 411 மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் கிருஷ்ணகிரி வட்டார கல்வி மையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. 

அதன்படி அனைத்து பள்ளிகளுக்கும் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள், வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. 

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி, பெத்த தாளாப்பள்ளி, ஆலப்பட்டி, நெக்குந்தி, கே.ஆர்.பி. அணை, அவதானப்பட்டி, மேலேரிகொட்டாய் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் நேற்று அனுப்பப்பட்டன. 

கொரோனா தளர்வுகளுக்குபின் இரண்டாம் பருவ பாடநூல்கள் வினியோகிக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் படித்து வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கும் பணி ஓரிரு தினங்களில் முடிந்தவுடன் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படும் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News