செய்திகள்
கோப்புபடம்

நிழற்குடை இல்லாததால் பல்லடத்தில் பரிதவிக்கும் பயணிகள்

Published On 2021-07-14 09:27 GMT   |   Update On 2021-07-14 09:27 GMT
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
பல்லடம்:

பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 700க்கும் மேற்பட்டவர்கள் புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் காத்திருந்து பஸ் ஏற, ரோட்டின் இரு பக்கமும் நிழற்குடை இல்லை. பொதுமக்கள் மழை, வெயிலில் நின்று சிரமப்படுகின்றனர். கடந்த ஆட்சியின் போது அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பணிகள் பாதியில் விடப்பட்டன.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் நிழற்குடை இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில்  நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags:    

Similar News