ஆன்மிகம்
ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரிபிரகாரத்தில் வலம் வந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு தொடங்கியது

Published On 2021-10-25 02:57 GMT   |   Update On 2021-10-25 02:57 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு நேற்று தங்கத்தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் தங்கத்தேர் ஓடாமல் இருந்தது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், 6 மாதத்திற்கு பிறகு நேற்று மாலையில் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு தொடங்கியது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, தனது மகள் குறிஞ்சிமலர் பெயரில் தங்கத்தேர் இழுப்பதற்கு பணம் கட்டியிருந்தார். இதையடுத்து இணை ஆணையர் தனது மகளுடன் தங்கத்தேர் இழுத்தார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தங்கத்தேர் கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News