ஆன்மிகம்
மாரியம்மன்

சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-09-20 08:17 GMT   |   Update On 2021-09-20 08:17 GMT
சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் கோவில் கொடை விழா கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீதுர்க்கை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பட்டு சாத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.
சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் கோவில் கொடை விழா கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் யானை கொடிபட்டம் சுமந்து ரத வீதி சுற்றி வந்து கோவிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜையுடன கொடியேற்றம நடைபெற்றது. தொடர்ந்து செல்வவிநாயகர், தர்ம பெருமாள், வீர ஆஞ்சநேயர், நாதவல்லி தாயார், சுடலை ஆண்டவர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீதுர்க்கை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பட்டு சாத்தி சிறப்பு பூஜைகளும், மாலை 5 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

நேற்று காலையில் புளியடி தர்ம பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, இரவு 12 மணிக்கு ஸ்ரீதர்ம பெருமாள் சிறப்பு அலங்கார பூ சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது. 5-ம் நாள் காலை 7மணிக்கு அம்மனுக்கு பக்தர்கள் நேர்ச்சை பால்குடம் சமர்ப்பித்தல், இரவு 7 மணிக்கு அம்மன் கும்பம் வீதி உலா வருதல், முளைப்பாரி சமர்பித்தல், இரவு 12 மணிக்கு ஸ்ரீமுத்தாரம்மன் அலங்கார பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும். 7-ம் நாள் 23-ந்தேதி காலை 9 மணிக்கு பால்குடம் பவனி, தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது.

8-ம்நாள் 24-ந்தேதி காலை முதல் சிறப்பு பூஜைகள், இரவு 12மணிக்கு ஸ்ரீவெற்றி விநாயகர் கோவிலில் இருந்து சுவாமி அக்னி சட்டி ஏந்தி வந்து ஆலய வளாகத்தில் பூக்குழி இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தல் நடக்கிறது. 9-ம் நாள் 25-ந் தேதி இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, 10-ம் நாள் 26-ந்தேதி காலை 11 மணிக்கு அம்மன் மஞ்சள் அபிஷேகம், பக்தர்கள் மஞ்சள் நீராடுதல், 12மணிக்கு மாரியம்மனுக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது.
Tags:    

Similar News