செய்திகள்
கோப்புபடம்

விதிகளை மீறும் ஆலையின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2021-09-29 04:49 GMT   |   Update On 2021-09-29 04:49 GMT
நீர், மண் மற்றும் விவசாய தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்படியாக பல்வேறு இடங்களில் தனியார் ஆலைகள் செயல்படுகின்றன.
குண்டடம்:

திருப்பூர் மாவட்டம் குண்டடம் - சங்கராண்டாம்பாளையத்தில் தனியார் இரும்பு உருக்கு ஆலை அமைந்துள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி, ஆலையின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

நீர், மண் மற்றும் விவசாய தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்படியாக பல்வேறு இடங்களில் தனியார் ஆலைகள் செயல்படுகின்றன. குண்டடம் பகுதியில் உள்ள இரும்பு ஆலையால் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம். 

இருந்தும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அனுப்பட்டியில் உள்ள ஆலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தெரிந்தும், சம்பந்தப்பட்ட ஆலைகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றனர்.

திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாடு வாரிய கோட்ட பொறியாளர் சாமிநாதன் கூறியதாவது:

விதிமுறை மீறி செயல்பட்ட பல்வேறு நிறுவனங்கள் மீது கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது. மாவட்ட குழுவின் மூலம் மட்டுமே கூடுதல் நடவடிக்கை எடுக்க முடியும்.

விதிமீறும் ஆலைகள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்து கேட்டுள்ளோம். ஒருசில தினங்களில் அது தொடர்பான பதில் கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News