ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கார்த்திகை சோமவார பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கார்த்திகை சோமவார பூஜை

Published On 2020-12-01 08:23 GMT   |   Update On 2020-12-01 08:23 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் அங்குள்ள காசி விஸ்வநாதர் சன்னதி, வீர பிரம்மேந்திரசாமி சன்னதியில் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து, தீபம் ஏற்றி வழிபட்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று 3-வது தெலுங்கு கார்த்திகை சோம வாரம் என்பதால் அங்குள்ள காசி விஸ்வநாதர் சன்னதி, வீர பிரம்மேந்திரசாமி சன்னதியில் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து, தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தனர்.

மேலும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான சகஸ்ர லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடி, விரதம் கடைப்பிடித்து, சகஸ்ர லிங்கேஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர். அங்கு பக்தர்கள் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

இந்தக் கோவில் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அந்தக் கோவில் தென்கயிலாயத்தின் (தலை நாகம்) சிரசு என்றும், மக ரிஷிகள், முனிவர்கள் கடும் தவம் செய்து சிவனின் அருள் பெற்ற தலம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய பிரசித்திப் பெற்ற கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் வந்து தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News