செய்திகள்
கோப்புப்படம்

அந்தியூர் அருகே தனியார் கம்பெனி பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

Published On 2019-11-06 04:41 GMT   |   Update On 2019-11-06 04:41 GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இன்று காலை தனியார் கம்பெனி பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியில் இருந்து தினமும் காலை நேரங்களில் பெருந்துறையில் செயல்படும் தனியார் கம்பெனிக்கு ஆண்கள் மற்றும் பெண்களை வேலைக்கு அழைத்துச் செல்ல பஸ் வந்து செல்லும்.

இந்த கம்பெனியில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கம்பெனி வாகனங்களை இயக்குவதற்காக எண்ணமங்கலம் பகுதியிலிருந்து 5 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். பின்பு பணியிலிருந்து வேறொரு நிறுவனத்திற்கு சென்றுவிட்டதாக தெரியவருகிறது.

இந்த 5 பேரின் ஓட்டுநர் உரிமத்தை பெருந்துறையில் செயல்படும் தனியார் நிறுவனம் திருப்பி அவர்களிடத்தில் கொடுக்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று காலை அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியில் அந்த 5 பேருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பஸ்சை சிறை பிடித்தனர். இதனை அறிந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த 5 பேரின் குடும்பத்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்பு பெருந்துறையில் செயல்படும் தனியார் கம்பெனி நிறுவனத்தில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர்களது ஓட்டுனர் உரிமத்தை வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தில் கொண்டுவந்து ஒப்படைப்பதாக தெரிவித்ததையடுத்து பஸ்சை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News