ஆன்மிகம்
விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தவர்களை படத்தில் காணலாம்.

மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழா

Published On 2019-10-23 06:00 GMT   |   Update On 2019-10-23 06:00 GMT
ஹரிப்பாடு, மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாளில் வழக்கமான பூஜைகளுடன் மாலை 3 மணிக்கு நாகராஜா விருது வழங்கும் விழா நடந்தது. இதில், பிரபல இசை கலைஞர்கள் நாராயணன் நம்பியார், குமார கேரள வர்மா, கலாமண்டலம் வாசு பிசாரடி, நிர்மலா பணிக்கர் ஆகியோருக்கு நாகராஜா விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து மகா தீபாராதனை, மோகினியாட்டம், நடிகை திவ்யா உண்ணியின் நடனம் போன்றவை நடைபெற்றது.

விழாவில் நேற்று நாகராஜாவுக்கும், சர்ப்பயக்சியம்மாவுக்கும் திருவாபரணம் அணிவிக்கப்பட்டு உச்ச பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் கதகளி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நிர்மால்ய தரிசனம், காலை 6 மணி முதல் 8 மணி வரை பாகவத பாராயணம், மாலையில் இசை கச்சேரி, திவாதிரைக்களி போன்றவை நடக்கிறது.
Tags:    

Similar News