செய்திகள்
நிவர் புயல் மையம் கொண்டுள்ள பகுதி

நெருங்கி வரும் நிவர் புயல், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, சூர்யாவை கொண்டாடும் ரசிகர்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Published On 2020-11-25 08:08 GMT   |   Update On 2020-11-25 08:08 GMT
நிவர் புயலால் கடலோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, சூர்யாவை கொண்டாடும் ரசிகர்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

# சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

# பீகார் சட்டசபையில் இன்று சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சியின் கடும் அமளிக்கு மத்தியில் நடந்த குரல் வாக்கெடுப்பில், பாஜகவைச் சேர்ந்த விஜய் சின்கா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

# வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

# காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அகமது படேலின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

# இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92 லட்சத்தை தாண்டியது. இதுவரை 86.42  லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.44 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.72 சதவீதமாகவும் உள்ளது.

# நிவர் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. களப்பணியாளர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சென்னை மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

# தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது. இதனால் 5 ஆணடுகளுக்குப் பிறகு ஏரியில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றங்ககரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

# நிவர் புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 3 நாட்களில் வங்க கடல் பகுதியில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

# கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, அஸ்வின் இடம் பெற்றுள்ளனர்.

# முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா இந்தியாவின் பெருமை என்று சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

# சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் அமித் சாத், 2 வருடத்தில் 4 முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.
Tags:    

Similar News