தொழில்நுட்பம்
இன்ஸ்டாகிராம்

ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்கும் இன்ஸ்டாகிராம்

Published On 2021-06-19 07:29 GMT   |   Update On 2021-06-19 07:29 GMT
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது செயலியின் ரீல்ஸ் பகுதியில் விளம்பரங்களை வழங்க துவங்கி இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்குவதற்கான சோதனையை அந்நிறுவனம் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக இந்த சோதனை தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பகுதியில் உங்களை பாளோ செய்யாதவர்களையும் விளம்பரம் மூலம் சென்றடைய முடியும்.



இதனால் அதிக பாளோவர்கள் இல்லாத சிறு வியாபாரங்கள், பிராண்டுகள் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும். பிராண்டுகள் மற்றும் க்ரியேட்டர்கள் முன்பை விட அதிக பிரபலமாக ரீல்ஸ் விளம்பரங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

விளம்பரங்கள் வழக்கமான ரீலஸ் போஸ்ட்களை போன்றே புல் ஸ்கிரீன் மற்றும் செங்குத்தாக தோன்றும். ஏற்கனவே ஸ்டோரிக்களில் வரும் விளம்பரங்களை போன்று இவை ரீல்ஸ்களின் இடையே வரும். அதிகபட்சமாக 30 நொடிகள் வரை ரீல்ஸ் விளம்பரங்களை பதிவிட முடியும். ரீல்ஸ் பகுதியில் வரும் விளம்பரங்களுக்கு மற்ற பயனர்கள் லைக், கமென்ட், சேவ் மற்றும் ஷேர் செய்யலாம்.
Tags:    

Similar News