ஆன்மிகம்
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் மல்லிகைப் பூக்களால் சிவனுக்கு அர்ச்சனை

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் குந்த சதுர்த்தி பூஜை: மல்லிகைப் பூக்களால் சிவனுக்கு அர்ச்சனை

Published On 2021-02-16 03:51 GMT   |   Update On 2021-02-16 03:51 GMT
கீழ் திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு ‘மாக’ மாதத்தையொட்டி குந்த சதுர்த்தி பூஜை நடந்தது. சிவன் அபிஷேக பிரியர் என்பதால், தெலுங்கு மாக மாதத்தில் முதல் முதலாக தேவஸ்தான தோட்டத்தில் மலர்ந்த மல்லிகைப் பூக்களால் நேற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து சான தான தர்ம திட்டத்தின் கீழ் திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு ‘மாக’ மாதத்தையொட்டி நேற்று இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை குந்த சதுர்த்தி பூஜை நடந்தது.

தெலுங்கு மாக மாதத்தில் மல்லிகைப் பூக்கள் மலர தொடங்குகின்றன. மல்லிகைகள் மலர கதிர்வீச்சுகளை உமிழ்ந்து சூரியன் உதவிபுரிகிறார். மல்லிகைப் பூக்கள் மலர்ந்ததும், அதனால் பக்தர்கள் சிவனை ஆராதிக்கிறார்கள். சிவன் அபிஷேக பிரியர் என்பதால், தெலுங்கு மாக மாதத்தில் முதல் முதலாக தேவஸ்தான தோட்டத்தில் மலர்ந்த மல்லிகைப் பூக்களால் நேற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

பக்தர்களும், பொதுமக்களும் சுபிட்சமாக வாழ வேண்டி குந்த சதுர்த்தி பூஜை நடந்தது. அதில் பங்ேகற்று வழிபட்டால் பக்தர்களுக்கு மன அமைதி கிடைக்கும், கடும் மனோபாவங்கள் தீரும், மோதல்கள் நீங்கி அமைதி நிலவும், தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். 300 வேதப் பண்டிதர்கள் பங்கேற்று நடத்திய குந்த சதுர்த்தி பூைஜயில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News