செய்திகள்
கண்காட்சியில் புத்தகங்கள் நிறைந்திருப்பதை காணலாம்.

உடுமலையில் 36-வது தேசிய புத்தக கண்காட்சி

Published On 2021-09-09 09:22 GMT   |   Update On 2021-09-09 09:22 GMT
16-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
உடுமலை:

உடுமலையில் 36-வது தேசிய புத்தக கண்காட்சி நேஷனல் புக் டிரஸ்ட் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், உடுமலை தொழில் வர்த்தக சபை, அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. 

இதில் உடுமலை தொழில் வர்த்தக சபை தலைவர் அருண்கார்த்திக் தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். 

கண்காட்சியில் வரலாறு, அறிவியல், சமூக அறிவியல், ஆன்மிகம், மருத்துவம், அறிவியல், ஆங்கிலம், தமிழ் இலக்கியம், சிறுவர்களுக்கான நூல்கள் என பல்வேறு துறை சார்ந்த பல ஆயிரக்கணக்கான நூல்கள் இடம் பெற்றுள்ளன.

வருகிற 16-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. 10 முதல் 25 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

முகக்கவசம், தனிமனித இடைவெளி என பாதுகாப்பு வழிமுறைகளுடன் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News